கொழும்பு தெமட்டகொடை பகுதியில் வைத்து ரயில் மீது நேற்று ஞாயிற்று கிழமை கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.40 மணியளவில் ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ரயிலில் அதிக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்ததோடு, கல் வீச்சுத் தாக்குதலினால் ரயிலின் யன்னல் மற்றும் கதவு சேதமடைந்துள்ளன.
இதேவேளை கல் வீச்சுத் தாக்குதலையும் மீறியும் ரயில் தொடர்ந்து தனது பயணித்தை மேற்கொண்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்