இலங்கை மகளிர் அணி வெற்றி

இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது.

இதற்கமைய 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 137 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்