அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், இலங்கைப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விக்டோரியாவின் ஹேர்ன்ஸ் ஓக், மெக்ராத்ஸ் டிராக்கில் உள்ள ஒரு வீட்டிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில் சமிந்திகா ஜயவர்தன (வயது 47) மற்றும் அவரது துணைவரான ஆரோன் ஹம்மண்ட் (வயது 46) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த வார முற்பகுதியில், மதியம் 12.15 மணியளவில் அவசர சேவைப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் இருவரது உடல்களையும் வீட்டிற்குள் கண்டெடுத்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு வீட்டில் இரண்டு பலத்த சத்தங்களைக் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் அவை பட்டாசுகள் அல்லது நரிகளை வேட்டையாடும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் என்றே அவர்கள் கருதியுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வேறு எவரையும் பொலிஸார் தேடவில்லை எனத் தெரிவித்துள்ள நிலையில், இது ஒரு கொலை-தற்கொலை சம்பவமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.