வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்று கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களனி பகுதியை சேர்ந்த துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய 43 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 20,000 “மென்செஸ்டர்” சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அவர் எதிர்வரும் 17ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்