இரவில் எனக்கு அந்த பழக்கம் உண்டு : இதுதான் திருமணம் செய்யாமைக்கு காரணம் – ஷகீலா

முன்னணி ஹீரோயினாக 90களில் வலம் வந்து பல இளசுகளின் தூக்கத்தை கெடுத்து கொண்டிருந்தவர் நடிகை ஷகீலா. இவர் நடிப்பில் வெளியான படங்கள் பலவும் முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிக வசூல் செய்தன.

தன்னுடைய படங்கள் அவ்வளவு வசூல் செய்தாலும் பொருளாதார ரீதியாக தன்னை வளர்த்துக் கொண்டாரா ஷகீலா என்றால்.. அது பெரிய கேள்வி குறிதான். காரணம், இவருடைய பெயரையும் கவர்ச்சியையும் பயன்படுத்தி படத்தின் தயாரிப்பாளர்கள் கோடிகளை சம்பாதித்தார்களே தவிர நடிகை ஷகீலாவிற்கு படத்தில் நடித்த சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க பல்வேறு சர்ச்சைகள், நீதிமன்றம் , வழக்கு என தாண்டி தற்பொழுது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பேட்டி எடுப்பது மற்றும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கை தொடர்பாக பேட்டி கொடுப்பது என பல விடயங்களை செய்து வருகிறார் நடிகர் ஷகீலா.

இடையில் தன்னுடைய சுயசரிதையையும் எழுதி இருக்கிறார். இவருடைய கூடுதல் பலமாக பார்க்கப்படும் ஒரு விடயம் என்னவென்றால், தன் வாழ்க்கையில் நடந்த நல்ல விடயங்களை இருந்தாலும் சரி, கெட்ட விடயங்களாக இருந்தாலும் சரி எதையும் மறைக்காமல் பொதுவெளியில் போட்டு உடைத்து விடுகிறார்.

நான் செய்ததை.. நான் செய்யவில்லை என கூறினால் என்ன நடக்கப்போகிறது. எதுவும் நடக்கப் போவதில்லை. நான் செய்ததை ஆமாம் நான் செய்தேன் என்று ஒப்புக் கொள்வதில் என்ற பயமும் எனக்கு கிடையாது என வெளிப்படையாக இருக்கிறார் நடிகை ஷகீலா.

இவருடைய இந்த பண்புக்காகவே பெரும்பாலான ரசிகர்கள் தற்போதும் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், குடும்ப வாழ்க்கை எனக்கு ஏற்றது அல்ல எனவே திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முடிவு எடுக்க என்ன காரணம் என்று ஷகீலாவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை ஷகீலா நான் 15 வயதிலேயே பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன். பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் எனக்குள் ஒரு இறுமாப்பு வந்துவிட்டது. அதனை மறுப்பதற்கு இல்லை. நான் சம்பாதிக்கிறேன், நான் செலவு செய்கிறேன், என்னுடைய வீட்டிற்கு வாடகை கட்டுகிறேன் அனைத்து செலவையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்ற இறுமாப்பு எனக்குள் வந்து விட்டது.

எனவே இன்னொரு நபரின் துணை வேண்டாம் என்று தோன்றியது. திருமணம் என்ற பெயரில் இன்னொரு நபர் என் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டாமே என்று தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு இரவு தூங்கும் முன்பு இருந்த குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் கண்டிப்பாக திருமணம் வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு என்னை தள்ளி விட்டது.

ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் நாளடைவில் அதற்கு என்னை அடிமையாக்கி விட்டது என்று தான் கூற வேண்டும்.

இரவு தூங்கும் முன்பு குடித்த மது குடித்தால் தான் தூக்கமே வரும் என்று நிலைக்கு தள்ளப்பட்டேன். இப்படி எல்லாம் நான் இருக்கும் பொழுது இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு வந்து அவருடைய மகிழ்ச்சியும் கெடுத்து என்னுடைய மகிழ்ச்சியும் கெடுத்து இப்படி செய்ய வேண்டும் என்பதால் திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டேன் என கூச்சமின்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகை ஷகீலா.

இந்த வெளிப்படையான பேச்சு ஷகீலா ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.