Sri Lanka Tamil News Site

கண்ணீர் விட்டு அழுத ரோகித் சர்மா

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இதனையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. அடிலெய்ட்டில் தொடங்கிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார்.

- Advertisement -

இதனையடுத்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இந்தியா அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் பறக்கவிட்டனர். இந்திய அணி ஒரு விக்கட் கூட எடுக்க முடியாமல் திணறியது.

ஜோஸ் பட்லர் மற்றும் அலக்ஸ் அரைசதம் கடந்தும் அதிரடியை கைவிடவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பட்லர் 80 மற்றும் அலக்ஸ் 86 ஓட்டங்கள் குவித்தனர். இதையடுத்து வரும் 13 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

 

- Advertisement -