இந்திய அணி 17 ஆண்டுகளின் பின்னர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தையும், 13 ஆண்டுகளின் பின்னர் ஐசிசியின் கிண்ணத்தையும் வென்றுள்ளது.
இந்த நிலையில் கபில் தேவ் மற்றும் மஹேந்திர சிங் தோனிக்கு பின்னர் இந்திய அணிக்குக் கிண்ணத்தை வென்று கொடுத்த மூன்றாவது அணித்தலைவர் என்ற பெருமையை ரோஹித் சர்மா தனதாக்கினார்.
நேற்றைய வெற்றியைத் தொடர்ந்து ரோஹித் சர்மா களத்தில் காணப்பட்ட புற்களை உட்கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்த மைதானத்திற்கு மரியாதை செலுத்தும் வகையிலும், இந்திய அணியின் வெற்றியினால் ஏற்பட்ட நெகிழ்ச்சியிலும் அவர் இவ்வாறு களத்தில் காணப்பட்ட புற்களை உண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இருபதுக்கு 20 உலகக் கிண்ண வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்