லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று  வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அதன் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதன் புதிய விலை 3,940 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை 70 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,582 ரூபாவாகும்.

2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்