கொழும்பு – கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டப் பேருந்து சேவையான CM06, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (Lanka Metro Transit – LMT) நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக இடைநிறுத்தம் காரணமாகப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், பயணிகளின் புரிந்துணர்வுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
எனினும், இந்தப் பேருந்து சேவை இடைநிறுத்தப்படுவதற்கான காரணம் மற்றும் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.










