-மூதூர் நிருபர்-
அண்மையில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை நிருவாக சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, மூதூரிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பெண் எஸ்.எல்.ஏ.எஸ் (SLAS) உத்தியோகத்தராக சாதனை படைத்துள்ளார் றஸீம் பாத்திமா றொஷானா.
மூதூர் ஆனைச்சேனையைப் பிறப்பிடமாகவும் தற்பொழுது ஆலிம் நகரை வசிப்பிடமாகவும் கொண்டவர் றசீம் பாத்திமா றொஷானா.
தனது ஆரம்பக் கல்வியை தி/மூ/அறபா நகர் வித்தியாலயத்திலும் தி/மூ/அல் – ஹிதாயா ம.வி, தி/மூ/மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இடைநிலைக் கல்வியையும், தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவிலும் கல்வி கற்ற இவர் பொது நிர்வாகத்தில் இளமானி பட்டத்தினையும் பெற்றுள்ளார்.
மூதூர் பிரதேச சபை, மூதூர் வலயக் கல்வி அலுவலகம், சேருவில பிரதேச சபை ஆகியவற்றில் 10 வருட சேவைக்காலத்தை நிறைவு செய்த இவர் தற்பொழுது மூதூர் பிரதேச சபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்