பாதிப்புற்ற பெண்களுக்கான நிகழ்ச்சி திட்டம்

-மூதூர் நிருபர்-

பெக்ட் மற்றும் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் (ரெக்டோ) ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் பெண்களின் அரசியல் பங்குபற்றுதலை அதிகரித்து பொருளாதார ரீதியாக பாதிப்புற்ற பெண்களுக்கு உதவும் வகையில் செயலமர்வொன்று திருகோணமலை ஜேகப் பீச் றிசோட்டில் 27 நடைபெற்றது.

ரெக்டோ நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அஷார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச மட்டத்தில் பெண் தலைமைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இலகுபடுத்துனர்களாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட அதிகாரி அருன் சிவஞானம் மற்றும் பெண் செயற்பாட்டாளர் எம்.ஏ.நஸ்றின் டிலானி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இதன்போது ரெக்டோ நிர்வாக,நிதி உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அனீஸ் ,நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஏ.எஸ்.எம்.தாணீஸ் உட்பட ரெக்டோ நிறுவன உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்