வௌ்ளத்தில் சிக்கிய கோழிகள் சந்தையில்: மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகள் இத்தினங்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இரசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சஞ்சய் இரசிங்க மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்