-மன்னார் நிருபர்-
அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைப்பிற் கெதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
மீனவ அமைப்புக்களின் ஒன்றியம் எனும் பெயரில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
குறித்த சுவரொட்டியில் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் அனைவரினதும் வயிற்றில் அடிக்கும் புதிய மீன்பிடி சட்டத்தை தோற்கடிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்