மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் உள்ளூராட்சி அதிகார சபைகளில் தற்காலிக ஊழியர்களாக கடமை வகித்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.
மாநகர சபை மண்டபத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 483 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்