-கிண்ணியா நிருபர்-
ரணில் விக்ரமசிங்கவால் பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என்ற நிலையிலும் ஜே.விபியினரோ, ஐக்கிய மக்கள் சக்தியோ ,ஐக்கிய தேசிய கட்சியோ விரும்பவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று ஞாயிற்று கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் பேசு பொருளாக ஜனாதிபதி தேர்தல் மாறியுள்ளது . இந்த தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் மற்றும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தேர்தல் ஆணைக்குழு போன்றன ஐந்து வருடங்கள் என்று கூறப்பட்டுள்ளது இதில் ஒரு நாள் கூட நீடிக்க முடியாது எனவும் சொல்லப்பட்ட போதிலும் இருவர் நீதிமன்றம் சென்றுள்ளனர் அதன் தீர்ப்பு ஐந்து வருடங்கள் என்ற நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது .
மீண்டும் அது பொதுஜன வாக்கெடுப்பு எடுக்கப்படாத பட்தத்தில் செல்லுபடியாகாது. சந்திரிகா அம்மையார் ,மஹிந்த ராஜபக்ச காலத்தில் ஒரு வருடமாக இருந்த விடயம் 19ஆவது திருத்தம் மூலமாக பாராளுமன்றில் ஆறு வருடமாக இருந்து ஐந்து வருடமாக ஜனாதிபதி பாராளுமன்ற காலப் பகுதி குறைக்கப்பட்டுள்ளது நான்கரை வருடத்தில் பொது தேர்தலை நடாத்த முடியும் என ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. 20ம் திருத்தத்தில் கோத்தபாய அதனை இரண்டறை வருடங்களில் நடாத்தலாம் என உறுதிப்படுத்தினார்கள்.
தற்போது அநுரகுமார,சஜீத் பிரேமதாச போன்றவர்கள் ஜனாதிபதி தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் மஹிந்தவின் மொட்டுக் கட்சியினர் பொது தேர்தலை நடாத்த வேண்டும் என்ற போதிலும் ஜனாதிபதி அதனை விரும்பவில்லை. ஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் 15 க்கும் ஒக்டோபர் 15க்கும் நடைபெற வேண்ம் என்பயனை உறுதிப்படுத்த அதனை தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 17ம் திகதி சகல கட்சியினரையும் அதன் செயலாளர்களையும் அழைத்து பேசவிருக்கிறது.
இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி எடுத்துக்கூறியுள்ளார் இதை சேரும் பூசும் நடவடிக்கையில் ஜனாதிபதி தேர்தல் அதன் நிதி ஒதுக்கீடு தொடர்பில் இறங்கியுள்ளனர் ஜனாதிபதி தேர்தலை உள்ளூராட்சிமன்ற தேர்தலுடன் ஒப்பிட முடியாது இது இந்த நேரத்தில் பொறுத்தமற்றது மக்களை குழப்பும் நிலையில் இது உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவரது உறையில் தேர்தல் தொடர்பில் தெளிவாக கூறியுள்ளார் முதலில் ஜனாதிபதி தேர்தல் இரண்டாவது பொதுத் தேர்தல் ,மாகாண சபை தேர்தல் நான்காவது உள்ளூராட்சிமன்ற தேர்தல் என தெளிவாக கூறியுள்ள போதிலும் இதனை கேள்விக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்த போது தற்போது சுமூகமான நிலையில் சென்று கொண்டிருக்கும் போது தங்களுடைய எதிர்கால திட்டங்களை தலைவர்கள் என்று கூறுகின்ற போது அதனை சரிப்படுத்துங்கள் மக்கள் தேர்தலில் சரியான முடிவுகளை எடுப்பார்கள் என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்