சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வெங்காயம்

நம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம், உணவுக்கு சுவையூட்டுவதோடு மட்டும் நின்று விடாமல் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் அதிக அளவில் கட்டுப்படுத்துகிறது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே உண்ண வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இப்படி வாயைக் கட்டி வாழ்ந்தால் மட்டுமே இரத்தத்தில் சர்க்கரை அளவை எப்போதும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்து உடல் நிலையை சீராக வைக்க முடியும் என்பது போன்ற ஒரு கருத்து தான் இவ்வளவு நாட்கள் நிலவி வந்தது. ஆனால் சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் வெங்காயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பெருமளவில் கட்டுப்படுத்துகிறது என்பது தெரிய வந்துள்ளது.

எவ்வாறு வெங்காயம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது :

வெங்காயத்தில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாகவே அமைந்திருக்கும். ஆனால் அதில் அளவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. வெங்காயத்தில் உள்ள “க்வெர்டேயின்” என்ற வேதிப்பொருள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக தெரியவந்துள்ளது. மேலும் வெங்காயத்தில் இயற்கையாகவே சல்பர் மிக அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சல்பர் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை வெகுவாக குறைக்கிறது.

வெங்காயத்தில் வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் பல சிறிய அளவிலான ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் அதிக அளவில் உள்ளதால் இவை சர்க்கரை நோய் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாகவே உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு வெங்காயம் எடுத்துக் கொள்ளலாம் :

அமெரிக்காவில் உள்ள “ஏடிஏ” னப்படும் சர்க்கரை நோய்க்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்த அமைப்பானது சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது அதில் மாவு சத்து குறைவாக உள்ள காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் அதிக அளவில் உட்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் அவற்றில் இயற்கையாகவே கார்போஹைட்ரேடுகளும் கலோரிகளும் அதிக அளவில் காணப்படும். இவை சர்க்கரை அழுத்தத்தை அதிகரித்து விடும்.

நம் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் மாவு சத்து இல்லாமலும், கலோரிகள் குறைவாகவும் மேலும் இயற்கையாகவே சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த உணவு பொருளாகவும் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு வெங்காயம் வீதம் எடுத்துக் கொள்வது நல்லது. பாதி சமைத்ததாகவும் பாதி சமைக்காமலும் எடுத்துக் கொள்ளலாம் ஒரு நாளைக்கு இரண்டு வெங்காயங்களுக்கு மேல் எடுத்துக் கொள்வது கார்போஹைட்ரேட் அளவை அதிகரித்து உடலுக்கு தீங்கிழைக்க வாய்ப்புகள் அதிகம்.