சிலாபம் தெதுரு ஓயாவில் நேற்று ஞாயிற்று கிழமை நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், மற்றைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் தனது மனைவி மற்றும் மூன்று பேருடன் தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்