காலியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி நேற்று வியாழக்கிழமை மாலை ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரொருவரே இதன் போது உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட ரயில் வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கருகில் இவ்விபத்து நடைபெற்றுள்ளது.
இதேவேளை சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினரகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்