வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது

கண்டி, மொரயாய பகுதியில் வெடிபொருட்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, மொரயாய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2 கிலோகிராம் அம்மோனியம் நைட்ரேட்டு மற்றும் 8 டெட்டனேட்டர் குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்