ஆப்கான் தலிபான் ஆட்சியுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்திற்கு தயாராகும் சீனா

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி, நாட்டின் வடக்குப் பகுதியில் எண்ணெய் தோண்டும் பணியை மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பின்னர் எரிசக்திக்கான முதல் பெரிய ஒப்பந்தம் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு கைச்சாத்திடப்படவுள்ள இந்த உடன்படிக்கைக்கு மேலதிகமாக, ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள தாமிர வைப்புச் சுரங்கத்தை தோண்டி எடுப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றையும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்று மேற்கொள்ள தயாராகி வருகின்றது.

ஆப்கானிஸ்தானின் எரிபொருள், இயற்கை எரிவாயு, தாமிரம் உள்ளிட்ட கனிமங்களின் மதிப்பு ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.