நேபாளில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக அந்நாட்டில் இன்று திங்கட்கிழமை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
காத்மண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த விமானம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
குறித்த விமானத்தில் 72 பயணிகள் மற்றும் பணிக்குழாமினர் பயணித்திருந்த நிலையில் அவர்களில் 68 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
தொடர்ந்தும் 2ம் நாளாகவும் விபத்து இடம்பெற்ற பகுதியில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றுதலுக்குள்ளானது.
இந்தநிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து நேபாளில் இன்று திங்கட்கிழமை துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -