காலி – அக்குரஸ்ஸ பிரதான வீதியின் கடுகொட பகுதியில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவல் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதி மக்களும் வீதியால் பயணித்த ஏனைய வாகன சாரதிகளும் இணைந்து துரிதமாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அணைத்துள்ளனர்.
இந்த விபத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என காவல்துறை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என
காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.