தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் ஒரு சந்தேகநபராகப் பெயரிட்டு, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக அழைப்பாணை விடுக்குமாறு கல்கிஸ்சை நீதவான் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ஹவ்லொக் வீடமைப்புத் தொகுதியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பெண் ஒருவரின் பையிலிருந்து தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியைக் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து கடந்த வருடத்தின் ஜூலை மாதம் 29 ஆம் திகதி துமிந்த திஸாநாயக்க விடுவிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இந்தத் துப்பாக்கி தொடர்பாக மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அறிக்கைகளுக்கு அமைய, துமிந்த திஸாநாயக்கவை ஒரு சந்தேகநபராகப் பெயரிட முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.