-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில், அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று செவ்வாய்கிழமை காலை, இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
அரச பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.