இராணுவத்தின் சம்பளப் பிரிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 180 இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் இராணுவ சிப்பாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மீது நம்பிக்கை மீறல், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றவியல் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்களுக்காகக் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்