கண்டியில் பேருந்தில் பயணித்த பெண்ணின் தலைமுடியை வெட்டியதாக கூறப்படும் மௌலவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் முர்தலாவ தெஹியங்க வடக்கு பகுதியைச் சேர்ந்தவரெனவும் முருதலாவ பிரதேச பள்ளியொன்றின் மௌலவி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் குறித்த பெண் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்த நபர் பெண்ணின் தலைமுடியை வெட்டியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தை எதிர்கொண்ட யுவதி, சந்தேகநபரையும், அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார்.
மடவளை பிரதேசத்தில் வசிக்கும் யுவதி சில தேவைகளுக்காக கண்டி நோக்கி பயணித்த வேளையில் இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார், அவர் அறிவித்ததன் பிரகாரம் பேருந்து பயணிகள் சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்