ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக நபர் கைது

தனமல்வில பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனமல்வில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

சந்தேக நபரிடம் இருந்து 8 கிராம் 233 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் .

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்