நயினாதீவு வாள்வெட்டின் பிரதான சூத்திரதாரி கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் நயினாதீவில் கப்பல் திருவிழா அன்று இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.

இந்த வாள்வெட்டின் பிரதான சந்தேகநபர், பல வாள்வெட்டுகளிலும் தொடர்புடையவர் என்ற ரீதியில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவில் பாரப்படுத்தப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தபட்டார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்