கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை: 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குளவி கொட்டு

அநுராதபுரம் கலாவெவ தேசிய வன பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையை சுற்றிவளைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெக்கிராவ பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழுவொன்று ஒலம்பேவ கிராமத்தை சுற்றிவளைத்து சட்டவிரோத மதுபானம் தயாரித்துக்கொண்டிருந்த இருவரை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, ​​அங்கிருந்த மேலும் இரு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதையடுத்து, பொலிஸார் விரைந்து சென்று சந்தேகநபர்களை கைது செய்த போது, ​​அருகில் இருந்த மரமொன்றில் இருந்த குளவி கூட்டில் குளவி கொட்டியுள்ளது.

இதன் போது கெக்கிராவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 7 சார்ஜன்ட்கள் காயமடைந்த நிலையில் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து நாற்பத்தேழாயிரம் மில்லிலிட்டர் கசிப்பு மற்றும் ஒரு இலட்சத்து ஐம்பத்தாறாயிரம் மில்லிலிட்டர் கோடாவை கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்