வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலில் நேற்று சனிக்கிழமை மாலை நீராடச் சென்ற கொரிய பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
37 வயதுடைய தென்கொரியாவைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடலில் அடித்துச் செல்லப்பட்டபோது கரையோரப் பாதுகாப்புப் படையினரும், உயிர்காப்புப் படையினரும் அவரை காப்பாற்றி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்