மட்டக்களப்பு – களுவன்கேணியில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தின் 71ஆவது வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழா பிரதமை திதியும் கேட்டை நட்சத்திரமும் சித்த யோகமும் அமையப்பெற்றுள்ள சுபவேளையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 24.05.2024 மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.
களுவன்கேணி சிங்காரத்தோப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து மடை எடுக்கும் வைபத்துடனும் பேச்சி தாயவளின் திருக்கதவு திறத்தலுடனும் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 5 தினங்கள் நடைபெறும் வருடாந்த சடங்கு உற்சவ மகா சக்திப் பெருவிழா பஞ்சமி திதியும் உத்திராட நட்சத்திரமும் சுபயோகமும் கூடிய பிரம்ம முகூர்த்த வேளையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 28.05.2024 அதிகாலை 3.30 மணிக்கு பள்ளைய பெலிகரும பூசையுடன் நிறைவு பெறும் என்றும் ஆலய நிருவாகம் மேலும் அறிவித்துள்ளது.
பூசைகள் யாவும் உற்சவ கால குரு தவத்திரு இள ரமேஸ்குமார் அவர்களாலும் ஆலய பிரதம குரு சிவத்திரு அவிரொளிசிவம் தெ. ராஜ்குமார் அவர்களின் சீடர்களாலும் நடத்தப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










