கல்லடி புனித அந்தோனியார் ஆலய கொடியிறக்க திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஞாயிற்று கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.

கல்லடி டச்பார் பங்கின் சிற்றாலயமான கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றமானது கடந்த 20.06.2024 அன்று மாலை 5.30 மணியளவில் பங்குத்தந்தை இயேசு சபைத்துறவி அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் ஆரம்பமானதை தொடர்ந்து செபமாலையும் அதனைத் தொடர்ந்து முதலாவது நாள் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

இதேவேளை பெருவிழா கூட்டுத் திருப்பலி இன்று காலை 7 மணியளவில் புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை அனிஸ்டன் மொறாயஸ் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்