-யாழ் நிருபர்-
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று திங்கட்கிழமை அயல்வீடுகளை சேர்ந்த இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஒருவர் மற்றையவர் மீது கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.