-யாழ் நிருபர்-
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனனாயக ஊழியர் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஊர்வலமாக வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
ஊழியரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொள், எம்.சி.ஏ கொடுப்பனவை அதிகரி, கல்விசாரா ஊழியர்களை மாற்றான் வீட்டு பிள்ளையாக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
தொழில்சங்க கூட்டுகுழுவினருடன் இணைந்து ஜனனாயக ஊழியர் சங்கத்தினர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










