ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி, இன்று வியாழக்கிழமை அதிகாலை, பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக எவ்வித உயிர்ச்சேதங்களும் இதுவரை பதிவாகவில்லை, என அந்நாட்டு அவசரப் பிரிவினரை மேற்கோள்காட்டி AFP News செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்குள் தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், ஜெருசலேம் நகரில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது