வீதி செப்பனிடுதலுக்கான ஆரம்ப நிகழ்வு

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு கிரான் புலிபாய்ந்தகல் தொடக்கம் முறுத்தானை வரையான வீதி செப்பனிடுதலுக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.

எமது கருத்திட்டத்திற்கு அமைய உலக வங்கி நிதியுதவியுடனான ஒருங்கிணைந்த இணைப்பு மற்றும் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ள புலிபாய்ந்தகல் தொடக்கம் முறுத்தானை வரையான பிரதான வீதியின் ஆரம்ப நிகழ்வானது கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திரு. சித்திரவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலக வங்கியின் நிதி உதவியுடன் குறித்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 81 கிலோமீட்டர் வீதிகளை புனரமைப்பதற்கான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்அதன் அடிப்படையில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேசத்தில் புலிபாய்ந்தகல் தொடக்கம் முறுத்தானை வரையான வீதி, புலிபாய்ந்தகல் சந்தி தொடக்கம் 5ம் கட்டை சந்தி வரையான வீதி, செட்டியார் குடியிருப்பு வீதி, ஆச்சிரம வீதி, கடற்கரை வீதி, பறங்கியாமடு மற்றும் கோரகல்லிமடு வீதி, வாகனேரி வீதி உட்பட 31 கிலோமீட்டர் வீதிகளை செப்பனிடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன் தெரிவித்தர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எஸ்.சிவகுமார், பிரதம பொறியியலாளர் எந்திரி பரதன் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.நவநீதன், திணைக்களங்களின் அதிகாரிகள் அரசியல் கட்களின் பிரதிநிதிகள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்