காசல்ரீ மற்றும் மவுஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிரம்பி வழியும் மட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய விமலசுரேந்திர, லக்சபான, நவ லக்சபான, கெனியோன் மற்றும் பொல்பிட்டிய நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு காசல்ரீ மற்றும் மவுஸாகலை நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்