சேவைக்கு சமூகம் அளித்த அரச அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு

நேற்று முன் தினம் திங்கட்கிழமை மற்றும் நேற்று செவ்வாய் கிழமை சேவைக்கு சமூகம் அளித்த நிறைவேற்று சேவைக்கு உட்படாத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் விசேட சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் அமைச்சரவையில் முன்வைத்த குறித்த ஜோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சேவைக்கு சமூகம் அளித்த அனைவரையும் எதிர்காலத்தில் பதவி உயர்வுகளுக்கு ஈடுபடுத்துவற்கு ஏற்றவாறான விசேட பாராட்டு சான்றுதல் ஒன்றை வழங்க ஜனாதிபதி முன்வைத்துள்ள ஜோசனைக்கே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் தரம் 5 சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு கொடுப்பனவை அதிகரிக்கவும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்