பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் மொத்தம் 9 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் 4 பேரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். தனது 6 மனைவிகளுடன் ஒரு வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கூறுகிறார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் சட்டப்படி பிரேசில் நாட்டில் அங்கீகரப்படவில்லை. ஆனாலும் ஆர்தர் ஆறு மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். தனது மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவரது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை,98,000 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மூலம் இவருக்கு மாதம் 33,000 யூரோக்கள் சம்பாதிக்கிறாராம். இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 29 லட்சம் ரூபாய். தன்னை ஃபாலோ செய்பவர்களுக்கு செக்ஸ் டிப்சும் தருகிறாராம்.
திருமணம் என்பது பல வகையான சமரசங்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்றாலும், திருமணம் வேடிக்கைக்காக செய்யப்படுகிறது என்கிறார். அவர் ஒரு மனைவியை மட்டுமல்ல, 6 மனைவிகளையும் சமமாக நேசிக்கிறாராம். தனது ஆறு மனைவிகளுக்காகவும் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன் என்கிறார். பல திருமணங்களை செய்துள்ள ஆர்தர், தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இவர்கள் ஒன்றாக வாழும் வீட்டிற்கு காதல் மாளிகை என்று பெயரிட்டுள்ளார்.
ஆறு மனைவிகள் ஒன்றாக இருக்கும் வீட்டில் தினம் தினம் சண்டை வரும் என எல்லோரும் நினைப்பார்கள் ஆனால் அப்படி எதுவும் நடப்பதில்லையாம். 6 மனைவிகளுடன் மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் ஆர்தர்.
இவர் தனது 6 மனைவிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க எளிய வழி என்ன என்பது குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஒவ்வொரு திருமணத்தையும் உயிருடன் வைத்திருக்க காதல் அவசியம் என்கிறார். தனது மனைவியுடன் நட்பாக இருந்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த பயணம் எளிதானது அல்ல என்பதையும் ஒப்புக் கொள்கிறார். இவரை சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். தன்னை பின்தொடர்பவர்களில் பலர் தாங்கள் காதலிப்பவர்களை எப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்கான டிப்ஸ்களை தன்னிடம் கேட்பதாக பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
