அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.84 ரூபாவிலிருந்து 327.91 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, டொலரின் விற்பனை விலை 336.79 ரூபாவிலிருந்து 336.82 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன.











