அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள், இன்று வியாழக்கிழமை போராட்டத் தளத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினருக்கும், ராஜாங்கனயே சத்தாரதன தேரர் மற்றும் சில பொதுமக்கள் அடங்கிய மற்றொரு குழுவினருக்கும் இடையே சத்தியாக்கிரகப் போராட்டத் தளத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் ருவன்வெலிசாயவுக்கு அருகில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.










