03 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
50000 பெறுமதியான ரொக்க பிணையிலும்இ தலா 500000 பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் செல்வதற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இவரின் பிரத்யேக பாதுகாவலர்கள் சிலரினால் அவருக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் அமல்பிரியங்க அமரசிங்க எனும் இளைஞனை கடத்தி தாக்கி காயப்படத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்