மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்த வகையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 684,150 ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 193,100 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 177,050 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்