டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான வழக்கில் மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின் பிரதிகள் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அலுவலகம் மற்றும் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்