இரண்டாவது நாளாக நகர சபை ஊழியர்கள் இன்றும் பணிப் பகிஷ்கரிப்பில்

-மூதூர் நிருபர்-

திருக்கோனேச்சரம் ஆலயத்திற்கு அருகாமையில் கசிப்பு விற்ற கடையினை சீல் செய்ய சென்ற நகர சபை ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் செவ்வாய் கிழமை இரண்டாவது நாளாக நகர சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு தொடர்கின்றது.

அவர்களுக்கு ஆதரவாக திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஊழியர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களின் கோரிக்கையாக தங்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்து தங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்