மலர்சாலை உரிமையாளர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு

காலியில் நேற்று செவ்வாய் கிழமை இரவு வெட்டுக் காயங்களுடன் மலர் சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தெல்வத்தை மலவெண்ண பிரதேசத்தைச் சேர்ந்த ஜீ.பி. துசித குமார என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலபிட்டிய ஆவாச தோட்டம் சந்தியில் நேற்றிரவு 11 மணியளவில் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அதன் சாரதி காயங்களுடன் சடலமாக காணப்படுவதாகவும் பலப்பிட்டிய பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்