மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிப்பு

வைன், பீர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கலால் வரி 20% அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் மீதான வரியும் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இந்த வரி அதிகரிப்புடன் ஒப்பிடும் போது மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.