இலங்கை ராணுவ தளபதியினால் ஏற்பாடு செய்யப்பட்ட 11வது மருத்துவ முகாம் நேற்று புதன்கிழமை மின்னேரியாவில் 7வது பீரங்கிப் படைப் பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் போர் வீரர் சேவைகள் மற்றும் புனர்வாழ்வு இராணுவம், இராணுவ சேவா வனிதா பிரிவுடன் இணைந்து ஊனமுற்றோர், ஓய்வுபெற்றோர் மற்றும் பணியில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக நாடு முழுவதும் நடத்தப்படும் மருத்துவ முகாம்களின் தொடர் நிகழ்வாக 11வது கட்டம் மின்னேரியாவில் இடம்பெற்றுள்ளது
இவ் மருத்துவ முகாமில் பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ் மருத்துவ முகாமில் பொது மருத்துவ ஆலோசனைகள், செயற்கை உறுப்பு பராமரிப்பு சேவைகள், தோல் மற்றும் பல் மருத்துவ மையங்கள் கண் மருத்துவ மையம் மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் போன்ற மருத்துவ சேவைகள் இடம்பெற்றுள்ளன.
இந் நிகழ்வில் இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ராணுவத்தின் உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்ற இராணுவத்தினர், இராணுவத்தின் குடும்ப உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர் .










