அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று வியாழக்கிழமை சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.33 ரூபாவிலிருந்து 328.37 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலையும் 337.23 ரூபாவிலிருந்து 337.27 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன.











