கதிர்காமம் ஊர்வலத்தில் யானை குழப்பம்: 13 பேர் காயம்

கதிர்காமம் முதலாவது நாள் திருவிழாவில் நேற்று சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் எசல பெரஹெரா ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த யானை ஒன்று குழப்பம் விளைவித்ததால் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

எசல பெரஹெரா ஊர்வலத்தினை நேற்றைய தினம் மக்கள் பார்வையிட்டு கொண்டிருந்த போது திடீரென யானை ஒன்று அதன் கட்டுப்பாட்டாளறை மீறி குழப்பம் விளைவித்ததில் ஏற்பட்ட பதற்றத்தால் மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்